Saturday, October 15, 2011
ஏமாற்றம்
விழி பயணித்த
தடங்கள் யாவும்
பாதம் பதிக்க
முடியவில்லை
முட்செடிகளாய் இருப்பதால்...
மனம் விரும்பிய
எண்ணங்கள் யாவும்
ஈடேறவில்லை
என்னவளாய் உன்னையும் சேர்த்து...
உதடு வெளிபடுத்திய
உணர்வுகள் யாவும்
பொய்யாய் போயின
இம்மாய உலகில்...
நீ
தொலை தூரப் பயணங்கள்
உற்சாகமாகியது
நீ என்னோடு பயணித்த வேளைகளில்...
இல்லம் சொர்கமாகியது
நீ என்னோடு கழித்த பொழுதுகளில்...
மகிழ்ச்சி ஆக்கியது
உன் வருகைக்காக மணிக்கணக்கில்
காத்திருந்த தருணங்களில்...
இன்று ஐந்து நிமிடப்
பயணம் களைபாகிறது...
வீடு நரகமாகிறது...
ஒரு நிமிட காத்திருப்பும்
வெறுப்பாகிறது...
நீ என்னோடு இல்லாத இவ்வுலகில்...
Tuesday, March 22, 2011
வாழ்க்கை
வாழ்க்கையை பின்னோக்கி
பார்க்கிறேன்...
அப்பா மட்டுமே என்
கதாநாயகனாக...
அம்மாவின் அணைப்பில்
மட்டும் தெரிந்த அன்பு...
அப்பாவின் தோளில்
என்னை சாய்த்துக்கொண்ட
தருணங்கள்...
உடன் பிறந்தவள் மட்டும்
என் விளையாட்டு எதிரியாக...
முட்டியில் ஏற்பட்ட சிராய்ப்புகள்
மட்டும் வலிகளாக...
பொம்மைகள் மட்டும்
உடைத்த பொருள்களாக...
புரிகிறது இப்பொழுது
காலம் மிகவும்
மாறிவிட்டதென்று ....
Monday, March 21, 2011
பள்ளி
நவீன உலகம்
Thursday, March 17, 2011
தனிமை
Monday, January 31, 2011
கடிதம்
நீல நிற காகிதமொன்றில்
தன் உள்ளத்தில் உள்ள
அன்பு வார்த்தைகளை கொட்டி
உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும்
அன்புள்ள என்று ஆரம்பித்து
அன்புடன் என்று முடிக்கும்
கடிதம் மிக அழகு....
அழகிய கிறுக்கலான
கை எழுத்துடன் தன்
கைப்பட எழுதும் கடிதம்
உணர்வுகளின் வெளிப்பாடு....
அன்பு அம்மாவிற்கும்
காதல் மனைவிக்கும்
பாசத் தங்கைக்கும்
உயிர் நண்பர்களுக்கும்
உறவுகளுக்கும்
எழுதும் கடிதம்
அன்பின் வெளிப்பாடு....
நவீன உலகில்
மனித இயந்திர
வாழ்க்கையில் கடிதம்
மறந்து மின்னஞ்சலாகிவிட்டன....
தொலைந்தது கடிதம்
மட்டுமல்ல
மனித உறவுகளுக்கு
இடையே உண்டான
அன்பும் பாசமும் தான்....
Subscribe to:
Posts (Atom)