skip to main |
skip to sidebar
வாழ்க்கையை பின்னோக்கி
பார்க்கிறேன்...
அப்பா மட்டுமே என்
கதாநாயகனாக...
அம்மாவின் அணைப்பில்
மட்டும் தெரிந்த அன்பு...
அப்பாவின் தோளில்
என்னை சாய்த்துக்கொண்ட
தருணங்கள்...
உடன் பிறந்தவள் மட்டும்
என் விளையாட்டு எதிரியாக...
முட்டியில் ஏற்பட்ட சிராய்ப்புகள்
மட்டும் வலிகளாக...
பொம்மைகள் மட்டும்
உடைத்த பொருள்களாக...
புரிகிறது இப்பொழுது
காலம் மிகவும்
மாறிவிட்டதென்று ....
தலைவாரி பூச்சூட்டி
சீருடை அணிந்து
பள்ளிக்கு தயார்படுத்தினாள்...
வழியில் பள்ளியில்
விட்டுவிடுமாறும் கூறினாள்...
என் மகளின் விருப்பதிற்க்காக
அவள் தயார்படுத்திய
பொம்மையோடு கிளம்பினேன்
அலுவலகத்திற்கு....
பயணிகள் நிழல்
குடைக்காக சாலையோர
மரங்களை வெட்டிச்சாய்த்தோம்...
அடுக்குமாடி குடியிருப்புக்காக
விவசாய நிலங்களை
அழித்தோம்...
மரங்களுக்காக
காடுகளையும் அழிக்கிறோம்...
நவீன உலகினை
உருவாக்க
இயற்க்கை அழகை அழித்து
செயற்கை அழகை
உருவாக்கும்
நவீன மனிதர்கள் நாங்கள்....
அலுவல் பணிகள் யாவும்
பிழையாய் போயின...
இல்லத்தில் இருந்த நேரங்கள்
தனிமைபடுத்தின...
வாகனம் ஓட்டுகையில்
கவனம் சிதறின...
சாலையில் நடக்கையில்
என் நிழல் மட்டும்
என்னோடு...
இவை யாவும் நீ
என்னுடன் இல்லாத
தருணங்கள்...