skip to main |
skip to sidebar
விழி பயணித்த
தடங்கள் யாவும்
பாதம் பதிக்க
முடியவில்லை
முட்செடிகளாய் இருப்பதால்...
மனம் விரும்பிய
எண்ணங்கள் யாவும்
ஈடேறவில்லை
என்னவளாய் உன்னையும் சேர்த்து...
உதடு வெளிபடுத்திய
உணர்வுகள் யாவும்
பொய்யாய் போயின
இம்மாய உலகில்...
தொலை தூரப் பயணங்கள்
உற்சாகமாகியது
நீ என்னோடு பயணித்த வேளைகளில்...
இல்லம் சொர்கமாகியது
நீ என்னோடு கழித்த பொழுதுகளில்...
மகிழ்ச்சி ஆக்கியது
உன் வருகைக்காக மணிக்கணக்கில்
காத்திருந்த தருணங்களில்...
இன்று ஐந்து நிமிடப்
பயணம் களைபாகிறது...
வீடு நரகமாகிறது...
ஒரு நிமிட காத்திருப்பும்
வெறுப்பாகிறது...
நீ என்னோடு இல்லாத இவ்வுலகில்...