skip to main |
skip to sidebar
காதல்...பாம்பின் கொடியதொரு
விஷமாய் என்னுள் பரவி
பசிமறந்து
தூக்கமிழந்து
நிலை கண்ணாடி முன்
அடிக்கடி முகம் பார்த்து
தனிமையில் உன்னோடு உரையாடி
எழுதுகோல் பிடித்த போதெல்லாம்
உன் பெயர் கிறுக்கி
உன்னை கண்டப்பின்
காதல் பித்தனானேன்...
கடலின் சீற்றத்திற்கு
அச்சமுண்டு
நீ கோவமாய் சீரும்வரை...
தீயின் சூடிற்க்கு
அஞ்சியதுண்டு
உன் சொற்கள் சுடும்வரை...
இருளை கண்டு
பயந்ததுண்டு
வெளிச்சமாய் நீ தோன்றும்வரை...
கனவுகள் பிடித்ததில்லை
நீ என் கனவில் வரும்வரை...
தாயின் அரவணைப்பு மட்டும்
பிடித்ததுண்டு
நீ என்னை அணைக்கும்வரை...
கர்பக்ரகத்தில் வைத்து
வேதம் ஓத வேண்டாம்...
கருப்பையில் சுமந்த
சுமையை சுகமாக்கி...
நித்திரை மறந்த
தன் இளமை காலத்தை
உனக்கே வாழ்ந்து...
முதிர்வு காலத்தில்
அவளை மனுஷியாய்
மதித்தால் போதும்....
வடிவங்கள் இல்லை
வலிகள் உண்டு
உன் நினைவுகளின்
உணர்வுகளை தாங்கும்
என் இதயத்திற்கு....
பிரிவு இல்லை
மரணம் உண்டு
உன்னை பிரிந்தப்பின்
மரத்துப்போன
என் இதயத்திற்கு....