Saturday, May 29, 2010

காதல் நிறைந்த உலகம் - 4




காதல் நிறைந்த உலகம்

தமிழ் அகராதியில்
உன் பெயரை
சேர்த்துவிட்டு
அழகு என்ற
வார்த்தையை
நீக்கிவிட போகிறார்களாம்....

****************************************

காற்றாய் மட்டும்
நான் இருந்திருந்தால்....
உன்னை வருடிக்கொண்டே
இருக்கும் சந்தோஷம்
கிடைத்திருக்கும்....

****************************************

ப்ரியங்களுடன்
நேத்ரன்


Tuesday, May 25, 2010

காதல் நிறைந்த உலகம் - 3




காதல் நிறைந்த உலகம்

உன்னை சந்தித்தப்பின் வரும்
என் பிறந்தநாள் மட்டுமே
பிடித்திருக்கிறது
நீ என்னை வாழ்த்துவதால்....

*********************************************
உன் கை பிடித்து
அக்னி வலம் வருகையில்
என்னை கைவிட மாட்டாயே என்பது போல
கையை இறுக்கி பிடித்தாய்...
என் உயிர் உன்னோடு இருக்கையில்
உடல் மட்டும் எங்கு செல்லும்....

******************************
****************
தலை குனிந்து பூமி பார்த்தே
வெட்கப்படும் நீ
நிமிர்ந்தும் வெட்கப்படு
நானும் ரசித்துவிட்டு
போகிறேன் உன் வெட்கத்தை....

******************************
****************

ப்ரியங்களுடன்
நேத்ரன்

காதல் நிறைந்த உலகம் - 2




காதல் நிறைந்த உலகம்

நீ ஒற்றை ரோஜா
சூடிவந்தாலும்
என் மனதில்
ரோஜா கூட்டமே
வந்த உணர்வு....

************************************

உனக்காக காத்திருக்கும் நான்
ஜென்ம சாபல்யம் அடைந்தேன்
உன் ஒற்றைப் புன்னகையில்....

******************************
*******

நான் உன்னை காதலிக்கறேன்
என்றபொழுது பதிலுக்கு
நானும் தான் என்று
பளிச்சென்று கூறினாயே
அக்கணம் முதல்
நான் நீ ஆகிவிட்டாய்....

******************************
*********

ப்ரியங்களுடன்
நேத்ரன்

காதல் நிறைந்த உலகம் - 1




காதல் நிறைந்த உலகம்

நீ என் தோள்மீது
சாய்ந்து கொள்ள கேட்டாய்...

என் தோளே நீ

சாய்ந்து கொள்ளத்தான் என்று

உனக்கு தெரியாதா....


********************************************
உன் மேல் கொண்ட காதலினால்
உன் விருப்பங்கள் யாவும்
என்னுடயதாகி விட்டன....

******************************
**************
நிலவின் அழகில் பிரம்மித்திருக்கிறேன்
உன்னை காணும் வரை...
நிலவுக்கு செல்ல ஆசைபட்டிருக்கிறேன்
நிலா மகளாய் நீ வரும்வரை....

******************************
***************
நாம் காதலிக்க ஆரம்பித்தப் பின்
என்னை தவிர வேறு
ஒருவரையும் பார்க்க
பிடிப்பதில்லை என்றாய்...
எனக்கோ பார்ப்பதற்கு
என்னையே பிடிப்பதில்லை
உன்னை தவிர....

******************************
**************
மீண்டும் வரும் என் பிறந்தநாளை
எதிர்நோக்கி ஆவலுடன்
காத்திருக்கிறேன் ...
நீ எனக்கு கூறும்
அந்த நள்ளிரவு
வாழ்த்து செய்திக்காக....

******************************
****

ப்ரியங்களுடன்
நேத்ரன்

Saturday, August 29, 2009

காதல்



காதல்...
பாம்பின் கொடியதொரு
விஷமாய்
என்னுள் பரவி
பசிமறந்து

தூக்கமிழந்து

நிலை
கண்ணாடி முன்
அடிக்கடி
முகம் பார்த்து
தனிமையில்
உன்னோடு உரையாடி
எழுதுகோல்
பிடித்த போதெல்லாம்
உன்
பெயர் கிறுக்கி
உன்னை
கண்டப்பின்
காதல்
பித்தனானேன்...

மாற்றங்கள்




கடலின் சீற்றத்திற்கு
அச்சமுண்டு

நீ
கோவமாய் சீரும்வரை...
தீயின்
சூடிற்க்கு
அஞ்சியதுண்டு

உன்
சொற்கள் சுடும்வரை...
இருளை
கண்டு
பயந்ததுண்டு

வெளிச்சமாய்
நீ தோன்றும்வரை...
கனவுகள்
பிடித்ததில்லை
நீ
என் கனவில் வரும்வரை...
தாயின்
அரவணைப்பு மட்டும்
பிடித்ததுண்டு

நீ என்னை அணைக்கும்வரை...

Tuesday, August 25, 2009

தாய்




கர்பக்ரகத்தில் வைத்து
வேதம் ஓத வேண்டாம்...
கருப்பையில் சுமந்த
சுமையை சுகமாக்கி...
நித்திரை மறந்த
தன் இளமை காலத்தை
உனக்கே வாழ்ந்து...
முதிர்வு காலத்தில்
அவளை மனுஷியாய்
மதித்தால் போதும்....

Monday, August 24, 2009

இதயம்




வடிவங்கள் இல்லை
வலிகள் உண்டு
உன் நினைவுகளின்
உணர்வுகளை தாங்கும்
என் இதயத்திற்கு....
பிரிவு இல்லை
மரணம் உண்டு
உன்னை பிரிந்தப்பின்
மரத்துப்போன
என் இதயத்திற்கு....